அகமதாபாத் விமான நிலையம் மூடப்பட்டது
Jun 12, 2025
குஜராத்தில் விமானம் விழுந்து நொறுங்கியது!
Jun 12, 2025
உலகம்
கொலம்பிய அரசின் நடவடிக்கை ஏமாற்றம் அளிக்கிறது - காங். எம்.பி சசி தரூர்
May 30, 2025 05:34 AM
136
கொலம்பிய அரசின் நடவடிக்கை ஏமாற்றம் அளிக்கிறது - காங். எம்.பி சசி தரூர்
இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு கொலம்பிய அரசு இரங்கல் தெரிவித்தது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளதாக காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தெரிவித்தார்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து சர்வதேச அரங்கில் எடுத்துரைக்க, சசி தரூர் தலைமையில் எம்.பிக்கள் குழு கொலம்பியா சென்றுள்ளது. அங்கு செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளை கொலம்பிய அரசு நன்கு புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
பயங்கரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதற்குப் பதிலாக, பாகிஸ்தானில் இறந்தவர்களுக்கு கொலம்பிய அரசு இரங்கல் தெரிவித்துள்ளது என்றும், இந்தியாவின் நடவடிக்கையில் தவறான புரிதல் இருந்தால் அதைப் போக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கொலம்பியாவைப் போலவே, இந்தியாவும் பல தசாப்தங்களாக பயங்கரவாத தாக்குதல்களைச் சந்தித்து வருவதாக சசி தரூர் தெரிவித்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu