RECENT NEWS

சென்னை 'ரூட் தல' மோதலை தடுக்க 257 இடங்களில் கண்காணிப்பு

BIG STORIES

8 பேர் உயிரிழப்பு பல் சிகிச்சையில் இப்படியொரு ஆபத்தா? வெளியான அதிர்ச்சி தகவல்!

May 30, 2025 01:56 AM

645

8 பேர் உயிரிழப்பு பல் சிகிச்சையில் இப்படியொரு ஆபத்தா? வெளியான அதிர்ச்சி தகவல்!

8 பேர் உயிரிழப்பு பல் சிகிச்சையில் இப்படியொரு ஆபத்தா? வெளியான அதிர்ச்சி தகவல்!

பல் மருத்துவ சிகிச்சைக்கு சென்றால் கூட இப்படியெல்லாம்கூட உயிரிழப்பு ஏற்படுமா? என அச்சம் கொள்ளும் அளவுக்கு, வாணியம்பாடியில் 8 பேர் உயிரிழந்ததாக வெளியாகி இருக்கும் தகவல் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியைச் சேர்ந்தவர் பல் மருத்துவர் அறிவரசன். இவர் நடத்தி வரும் அறிவு பல் மருத்துவமனையில், 2023 ஆம் ஆண்டு சிகிச்சை பெற்ற எட்டு பேர் தான் விபரீதமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த இந்திராணி, வரதன், சத்யா, இளங்கோவன், அனிதா, நர்மதா, ஜெயசீலி, உள்ளிட்ட 8 பேரும் Neuromelioidosis - பாக்டிரியா தொற்று காரணமாக இறந்ததாக தகவல் வெளியானது.

இதுதொடர்பாக, CMC வேலூர் மற்றும் தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறை இயக்குநரகம் மற்றும் ICMR எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு நடத்திய விசாரணையில்தான் எட்டு பேரின் உயிரிழப்பிறகான காரணம் தெரியவந்தது.

அதாவது, பல் மருத்துவ அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தபடும் கருவியான, Periosteal lift எனப்படும் அறுவை சிகிச்சை கருவியைப் பயன்படுத்தி, செலைன் பாட்டில் திறக்கப் பட்டதாகவும், இதன்மூலம், நியூரோ மெலியோடோசிஸ் என்னும் பாக்டீரியா தொற்று செலைன் பாட்டில்கள் மூலம் பரவி, சிகிச்சை அளிக்கப்பட்ட மேற்கண்ட எட்டு நபர்களின், நரம்பு மண்டலங்களை பாதித்து உயிரிழப்பை ஏற்படுத்தியதாக இந்தக் குழுவினர் நடத்திய ஆய்வில் தெரிய வந்ததாக அறிக்கை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல் மருத்துவர்களின் சிறு கவனக்குறைவும் உயிரை கொல்லும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சியாக மாறியிருக்கின்றது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

13 வருஷ வேலைக்காரன் முதலாளி வீட்டில் பார்த்த பெரிய வேலை என்ன தெரியுமா? காவலர் உள்ளிட்ட 4 பேர் கைது

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies