உக்ரைன் விவாதத்தில் பங்கேற்ற எம்பிக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

0 2448

உக்ரைனில் இருந்து ஆபரேசன் கங்கா திட்டத்தின் மூலம் இந்தியர்களைப் பாதுகாப்பாக அழைத்து வந்தது தொடர்பாக கடந்த சில நாட்களாக ஆரோக்கியமான விவாதங்களை எழுப்பிய எம்பிக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

இருதரப்பு உறவுகளின் பயனாக இந்தியாவின் நிலைப்பாடும் வெளியுறவுக் கொள்கையும் உலக அளவில் கவனம் பெற்றதாகவும் மோடி கூறினார். இந்தியர்களின் பாதுகாப்பு தான் முக்கியம் என்றும் மோடி உறுதியாகத் தெரிவித்தார் .

அசாதாரண சூழல்களில் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து வகை நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments