ரயில் தண்டவாளங்களில் பேரிகாடுகள் வைப்பது முடிவுக்கு வர வேண்டும் : கனடா பிரதமர்

0 728

கனடாவில் ரயில் தண்டவாளங்களில் பேரிகாடுகள் (barricades) வைப்பது முடிவுக்கு வர வேண்டுமென பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ வலியுறுத்தியுள்ளார்.

கடற்கரையோர பகுதியில் எரிவாயு பைப் லைன் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரிட்டிஸ் கொலம்பியா, அல்பெர்டா, க்யுபெக், ஆன்டாரியா (British Columbia, Ontario, Alberta and Quebec ) பகுதிகளில் தண்டவாளங்களின் குறுக்கே பேரிகார்டுகளை அப்பகுதியினர் அமைத்துள்ளனர்.

இதனால் ரயில் சேவையும், சரக்கு போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய ட்ருடோ, பேரிகாடு விவகாரத்தில் சொந்த கனடா மக்களுக்கு எதிராக ராணுவத்தை பயன்படுத்த விரும்பவில்லை என்றும், அமைதி வழியில் அவை அகற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments