குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கம்
Mar 07, 2026
பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு
Mar 07, 2026
ஈரான் போரால் அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு
Mar 07, 2026
உலகம்
போதைப்பொருள் கடத்தல் மன்னன் 'எல் மென்சோ' என்கவுன்டரில் கொலை
Feb 24, 2026 10:40 AM
31
போதைப்பொருள் கடத்தல் மன்னன் 'எல் மென்சோ' என்கவுன்டரில் கொலை
என்கவுண்டரில் கொல்லப்பட்ட போதைப்பொருள் கடத்தல் மன்னன் ”எல் மென்சோ”வின் பதுங்கிடத்தை அவரது பெண் தோழி மூலம் கண்டுபிடித்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
எல் மென்சோ என அழைக்கப்பட்ட நெசேமியோ ஒசிகுவேரா, கடந்த பல ஆண்டுகளாக மெக்சிகோவில் தலைமறைவாக இருந்தபடி அமெரிக்காவுக்கு மிகப்பெரிய அளவில் கொக்கைன் கடத்திவந்தார்.
அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றிவந்ததால் அவரை பிடிக்க முடியாமல் அமெரிக்கா மற்றும் மெக்சிகோ நாட்டு உளவுத்துறையினர் திணறிவந்தனர்.
இந்நிலையில், அவர் பதுங்கியுள்ள இடங்களுக்கு அவரது பெண் தோழிகளை அழைத்துச் செல்லும் நபரை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவந்த அதிகாரிகள், அதன் மூலம் அவரது இருப்பிடத்தை கண்டுபிடித்து ராணுவத்துக்குத் தகவல் அளித்துள்ளனர்.
ஞாயிறு அதிகாலை ராணுவத்துடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பலத்த காயமடைந்த எல் மென்சோ, ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்ததாக ராணுவத்தினர் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu