மலை கிராமங்களில் கஞ்சா விற்ற 5 பேர் கைது
Feb 24, 2026
மலை கிராமங்களில் கஞ்சா விற்ற 5 பேர் கைது
Feb 24, 2026
10 ஆண்டுகளில் இல்லாத பனிப் புயல்
Feb 24, 2026
தமிழ்நாடு
ஆசிரியர் மீது போலி பாலியல் குற்றச்சாட்டு - ஆசிரியைகளுக்கு சிறை
Feb 24, 2026 11:23 AM
20
ஆசிரியர் மீது போலி பாலியல் குற்றச்சாட்டு - ஆசிரியைகளுக்கு சிறை
தேனி மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர் மீது பொய்யான பாலியல் குற்றச்சாட்டை சுமத்திய 2 ஆசிரியைகள் உள்ளிட்ட 7 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நரியூத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார் கோகில பாண்டியன்.
அவர் மீது அதே பள்ளியில் பணியாற்றிய ஆசிரியைகள் வனிதா, ராமலட்சுமி ஆகியோர் தங்களிடம் கோகில பாண்டியன் தவறாக நடந்துகொண்டதாக்கூறி பாலியல் குற்றச்சாட்டு புகார் தெரிவித்து இருந்தனர்.
மேலும், பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்த ரவிச்சந்திரன், அப்போதைய மாவட்ட கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த மொக்கத்துரையுடன் சேர்ந்து போலி பாலியல் புகாரில் கோகில பாண்டியனை சஸ்பெண்ட் செய்துள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், தன் மீதான நடவடிக்கை எதிர்த்து கோகில பாண்டியன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தார்.
அதனடிப்படையில் அமைக்கப்பட்ட விசாகா கமிட்டி நடத்திய விசாரணையில், முன்விரோதம் மற்றும் பணியின்போது ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக கோகில பாண்டியன் மீது திட்டமிட்டு பொய்யான பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியிருப்பது கண்டறியப்பட்டது.
இது தொடர்பான வழக்கில், மாவட்ட கல்வி அலுவலர், ஆசிரியைகள் வனிதா, ஆசிரியை ராமலட்சுமி ஆகிய மூவருக்கும் தலா மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும், மற்றொரு மாவட்ட கல்வி அலுவலர், அவரது நேர்முக உதவியாளர், வட்டார கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கும் சிறை தண்டனை விதித்தகப்பட்டது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu