10 ஆண்டுகளில் இல்லாத பனிப் புயல்
Feb 24, 2026
உலகம்
10 ஆண்டுகளில் இல்லாத பனிப் புயல்
Feb 24, 2026 09:44 AM
17
10 ஆண்டுகளில் இல்லாத பனிப் புயல்
அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணங்களைத் தாக்கியுள்ள சக்திவாய்ந்த பனிப்புயல் காரணமாக, கடந்த 24 மணிநேரத்தில் 10 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. யுனைடெட் ஏர்லைன்ஸ், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மற்றும் டெல்டா ஆகிய நிறுவனங்கள் தலா 20 சதவீத விமான சேவைகளை நிறுத்தி வைத்தன. இதனால் விமான நிலையங்களில் பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது
சுமார் 3 அடி உயரத்திற்குப் உறைபனி தேங்கியதால், கனெக்டிகட், மைனே, மாசசூசெட்ஸ், நியூ ஹாம்ப்ஷயர், நியூ ஜெர்சி, நியூயார்க், பென்சில்வேனியா உள்ளிட்ட மாகாணத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக வாகனங்கள் பயணிக்க பல மாகாணங்கள் தடை விதித்துள்ளன. நியூயார்க் நகரம் மான்காட்டன் பகுதியில் ஆர்வர்லர்கள் சிலர் பனிப்பொழிவை கொண்டாடி மகிழ்ந்தார்
கடும் பனிப்பொழிவால் பல வடகிழக்கு மாகாணங்களில் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டனர். வானிலை சீரடைந்த பின்னரே முழுமையான இயல்பு நிலை திரும்பும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu