முகப்பு
5 வருசமாக அலைக்கழிக்கறீங்க... அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை முற்றுகையிட்டு மக்கள் வாக்குவாதம்..! ரூ 29 கோடி - நகை மீட்கப்படுமா..?
Dec 03, 2025 04:19 PM
166
திருச்செந்தூர் அருகே குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் வங்கி ஊழியர்களால் கையாடல் செய்யப்பட்ட 29 கோடி ரூபாய் மதிப்பிலான நகை பணத்தை மீட்டுக்கொடுக்காமல் 5 வருடமாக அலைக்கழிப்பதாக கூறி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்ட கிராம மக்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை அவரது சொந்த தொகுதிமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்த காட்சிகள் தான் இவை..!
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி குறித்த ஆய்வின் போது கடந்த 2021 ஆம் ஆண்டு திருச்செந்தூர் அடுத்த குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 568 தங்க நகை பொட்டலங்களில் 261 பொட்டலங்கள் மாயமானது. மயமான பொட்டலங்கள் வேறு ஒரு வங்கியில் அடகு வைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
வியாபாரிகளின் தினசரி சேமிப்பு தொகையான வங்கியின் வைப்பு நிதி ரூ. 29 கோடி மாயமானதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடி சம்பவத்தில் ஈடுபட்டதாக வங்கி செயலாளர் தேவராஜ், உதவி செயலாளர் ஜான்சி சந்திரகாந்தா பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த தூத்துக்குடி பொருளாதார குற்றபிரிவு போலீசார், இருவரது அசையாத சொத்துக்களையும் ஜப்தி செய்து பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் வழங்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் இவர்களின் சொத்துக்களை ஜப்தி செய்து ஏலம் விடுவதில் தொடர்ந்து குளறுபடி ஏற்பட்டு வருவதால், 4 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் நகைகைள் மற்றும் சேமிப்பு நிதி வைப்பு நிதி கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அங்கமங்கலம் கிராமத்திற்கு துணை சுகாதார நிலைய கட்டிடத்தை திறந்து வைக்க வந்த தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் ஆகியோரை முற்றுகையிட்டு நகைகள் பணத்தை மீட்டு தரும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
மேலும் மூதாட்டி ஒருவர் அமைச்சர் காலில் விழுந்து தங்கநகை மற்றும் பணத்தை மீட்டு தரும்படி கெஞ்சினார்.
5 வருடங்களாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்டவர் குற்றஞ்சாட்டிய நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் நடவடிக்கை எடுக்க இயலவில்லை என்று அமைச்சர் கூறியதால் இருவருக்கும் வாக்குவாதம் உண்டானது.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தோம். உடனடியாக மீட்டு தருவதாக உறுதி அளித்திருந்தார். ஆனால் இதுவரையும் யாருக்கும் பணம் நகை மீட்டு வழங்கப்படவில்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
எங்கள் ஓட்டு வேண்டாமா ? என்று கேட்டதால், அமைச்சருடன் வந்திருந்த உள்ளூர் திமுக பிரமுகர் ஒருவர் சத்தமிட்ட நபரை தள்ளிக் கொண்டு வெளியே சென்றார். அவரை பெண் ஒருவர் மடக்கி சரமாரியாக கேள்வி எழுப்பி விரட்டினார்.
இதையடுத்து அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அனிதா ராதாகிருஷ்ணன் உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu