முகப்பு
புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு என்னென்ன வகையில் உதவுகிறது இந்தியா?
Nov 30, 2025 02:53 AM
72
டிட்வா புயலால் பெரும் இன்னலுக்கு உள்ளாகி உள்ள இலங்கைக்கு உதவ ஆபரேசன் சாகர் பந்து நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளது இந்திய அரசு.
வெள்ளம் ஏற்பட்ட சூழலை அடுத்து முதற் கட்டமாக ஐ.என்.எஸ். விக்ராந்த், உதயகிரி என்ற இரு போர்க்கப்பல்கள் மூலம் உதவிப் பொருட்களை முதற்கட்டமாக இந்திய அரசு அனுப்பி வைத்தது.
கடற்படையை தொடர்ந்து இந்திய விமானப்படையும் உதவி பணியில் களமிறங்கியது. விமானப்படையின் சி-130, ஐ.எல்.76 விமானங்கள் மூலம் சுமார் 28 டன் உதவி பொருட்கள் இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இது தவிர தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 80 வீரர்களையும், 8 டன் கருவிகளையும் இந்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. இலங்கை அரசுக்கு உதவி பொருட்களுடன் மற்றொரு போர்க்கப்பலை அனுப்பி உள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu