மாவட்டம்
போலீஸ் எனக் கூறி ரியல் எஸ்டேட் ஊழியரிடம் ரூ.40 லட்சம் வழிப்பறி
Nov 29, 2025 01:51 PM
38
போலீஸ் எனக் கூறி ரியல் எஸ்டேட் ஊழியரிடம் ரூ.40 லட்சம் வழிப்பறி
சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்தவரை, போலீஸ் எனக்கூறி வலுக்கட்டாயமாக இறக்கி காரில் கடத்திச் சென்று அவரிடமிருந்த 40 லட்ச ரூபாயை கத்தி முனையில் பறித்துச் சென்ற 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரியும் சரவணக்குமார் என்பவர், மண்ணடியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரிடம் 40 லட்ச ரூபாய் பணத்தை வாங்கிக்கொண்டு கிளாம்பாக்கத்துக்கு பேருந்தில் பயணம் செய்துள்ளார். பெருங்களத்தூர்-வண்டலூர் இடையே, பேருந்தின் பின்பக்கம் உட்கார்ந்திருந்த இருவர், தங்களை போலீசார் எனக் கூறிக்கொண்டு, சரவணக்குமாரிடமிருந்த பணப்பையை பிடுங்கியுள்ளனர்.
பையில் கஞ்சா இருப்பதாகக் கூறி நடத்துநரிடம் பேருந்தை நிறுத்தச் சொல்லி, சரவணக்குமாருடன் இறங்கியுள்ளனர். அங்கு ஏற்கெனவே நின்றிருந்த காரில் சரவணக்குமாரை கடத்திச் சென்று, பணத்தை பறித்துக்கொண்டு பொத்தேரி அருகே இறக்கிவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளை கும்பலை தேடிவருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu