முகப்பு
"நாங்கள் தற்குறி இல்லை; ஆச்சர்யக்குறி" "தி.மு.கவின் எதிர்காலத்துக்குக் கேள்விக்குறி" த.வெ.க தலைவர் விஜய் ஆவேசம்
Nov 23, 2025 12:34 PM
283
திமுகவின் கொள்கையே கொள்ளை அடிப்பது தான் எனும் போது தவெகவை கொள்கை இல்லாத கட்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது சரியா என விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தவெகவினர் மற்றும் தங்கள் ஆதரவாளர்கள் தற்குறிகள் அல்ல என்றும் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தப்போகும் ஆச்சரியக்குறி எனவும் விஜய் கூறியுள்ளார். தவெக ஆட்சி அமைத்ததும் வீட்டிற்கு ஒருவருக்கு மோட்டார் சைக்கிள் நிச்சயம் என்றும் கார் லட்சியம் என்றும் தேர்தல் வாக்குறுதியையும் விஜய் வெளியிட்டுள்ளார்.
கரூரில் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி 55 நாட்களுக்கு பிறகு காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் நடைபெற்றது. தனியார் பல்கலைக்கழகத்தின் உள் அரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு சுமார் 3000 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. க்யூ ஆர் கோடுடன் கூடிய அழைப்பிதழுடன் வந்தவர்கள் மட்டுமே விஜய் கூட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். கைக்குழந்தைகளுடன் வந்தவர்களை தவெகவினர் திருப்பி அனுப்பினர்.
மக்கள் சந்திப்பு கூட்ட அரங்கிற்குள் ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தவெக சார்பில் தொண்டர் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
வழக்கமாக நிகழ்ச்சிகள், போராட்டங்களுக்கு தாமதமாக வரும் விஜய் இந்த முறை மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாக வந்துவிட்டார். சரியான நேரத்தில் மேடை ஏறிய விஜய், பொய் சொல்லி ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக தற்போது நல்லது செய்து கொண்டிருப்பது போல் நாடகம் போட்டுக் கொண்டிருப்பதாக சாடினார்.
கொள்கை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று கூறிய விஜய், "திமுகவின் கொள்கையே கொள்ளை தான்" என்றார். மேலும் அண்டர்கிரவுண்டில் கொள்கையை திமுக அடகு வைப்பதாகவும் சாடினார் விஜய்.
பவள விழா பாப்பா.. நீ நல்லவர் என நடிப்பதை பார்த்து நாடே சிரிக்கிறது பாப்பா என திமுகவை கிண்டல் செய்தார் விஜய்.
"குறி வைத்தால் தவறாது, தவறும் என்றால் குறியே வைக்கமாட்டேன்" என்ற எம்ஜிஆரின் வசனத்தைப் பேசிய விஜய், ஏண்டா விஜயை தொட்டோம், விஜயுடன் இருப்பவர்களை தொட்டோம் என நினைக்கும் நிலை எதிரிகளுக்கு வரும் என்றும் சூளுரைத்தார்.
பாலாற்றில் மணல் கடத்தல் மூலம் 4 ஆயிரத்து 730 கோடி ரூபாய் கொள்ளை அடித்துள்ளனர் என்றும் ஒரு கட்சி சிண்டிகேட் போட்டு கொள்ளை அடித்துக்கொண்டிருக்கிறது என்றும் த.வெ.க. தலைவர் விஜய் குற்றம்சாட்டினார். காவிரி டெல்டா விவசாயிகளை போல் காஞ்சிபுரம் நெசவாளர்களையும் திமுக அரசு கைவிட்டுவிட்டது என்றும் அவர் கூறினார்.
காஞ்சிபுரத்தில் 60 வருடமாக இருக்கும் பேருந்து நிலையத்தை மாற்றிவிட்டு ஒரு புதிய பேருந்து நிலையத்தை கூட அரசால் கட்ட முடியாதா என்றும் விஜய் வினவினார்.
ஒவ்வொருவருக்கும் ஒரு நிரந்தர வீடு, வீட்டுக்கு ஒரு மோட்டார் சைக்கிள், அனைவருக்கும் பட்டப்படிப்பு உள்ளிட்டவை தமது கட்சியின் கொள்கைகள் எனக் கூறிய விஜய், வீட்டுக்கு வீடு கார் வாங்கும் அளவுக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவோம் என்றார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu