முகப்பு
திருச்சி காவலர் குடியிருப்பில் வைத்து இளைஞர் வெட்டிப் படுகொலை
Nov 10, 2025 06:48 AM
137
திருச்சி காவலர் குடியிருப்பில் வைத்து இளைஞர் வெட்டிப் படுகொலை
திருச்சி காவலர் குடியிருப்பில் சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவரது வீட்டுக்குள் வைத்து இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
தாமரைச் செல்வன் என்ற அந்த இளைஞர், ரியல் எஸ்டேட் முகவராகப் பணியாற்றி வந்துள்ளார். 10 நாட்களுக்கு முன்பு எசனக்கோரை கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் தாமரைச் செல்வனுக்கும் கமிஷன் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டதாகவும் அதில் சதீஷை தாமரைச் செல்வன் அடித்து அவமானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரத்தில் இருந்த சதீஷ், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, இன்று பைக்கில் சென்று கொண்டிருந்த தாமரைச் செல்வனை இடித்துக் கீழே தள்ளி வெட்ட முயன்றுள்ளனர்.
உயிருக்குப் பயந்து அருகிலுள்ள காவலர் குடியிருப்புக்குள் ஓடி தஞ்சமடைந்த தாமரைச் செல்வனை கொலைகாரக் கும்பல் விரட்டிச் சென்று வெட்டிக் கொன்றது.
அலறல் சப்தம் கேட்டு குடியிருப்பிலிருந்த காவலர்கள் ஓடி வந்து கொலையாளிகளைப் பிடிக்க முயன்றபோது, இளமாறன் என்பவர் மட்டும் சிக்கியுள்ளார். அவரைக் கைது செய்த போலீசார், தப்பியோடிய 4 பேரைத் தேடி வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu