தனியார் கல்லூரியில் காவல் உதவி ஆய்வாளர் என மிரட்டி அட்மிஷன் கேட்ட நபரை கையும் களவுமாக பிடித்த போலீஸ்

0 2953

செங்கல்பட்டு அருகே உள்ள பிரபல தனியார் கல்லூரியில் காவல் உதவி ஆய்வாளர் என மிரட்டி அட்மிஷன் கேட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தருமபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்த துரிஞ்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் முகீத் .டிப்ளமோ படித்துள்ள இவர் கடந்த ஆண்டு காவல் உதவி ஆய்வாளர் தேர்வு எழுதி தோல்வி அடைந்த நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றி வருவதாக குடும்பத்தாரிடம் கூறியுள்ளார்.

இந்த நிலையில் காவலர் உடையுடன் பிரபல கல்லூரிக்கு சென்று எம்.டெக் படிப்பதற்காக அட்மிஷன் தர வேண்டும் எனவும், ஸ்காலர்ஷிப் வேண்டும் என்றும் கூறி உள்ளார். இதையடுத்து அவரது அடையாள அட்டையை பரிசோதித்த கல்லூரி நிர்வாகத்தினர் சந்தேகமடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.அவர்கள் வந்து விசாரணை நடத்தியதில் காவலர் என பொய் சொல்லி கல்லூரி நிர்வாகத்திடம் அட்மிஷன் கேட்டு மிரட்டியது தெரியவந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments