சற்றுமுன்
வீட்டை விற்று எடுத்துச் சென்ற பணத்தை பறிகொடுத்த பெண்.. ஷேர் ஆட்டோவில் பிக்பாக்கெட் அடித்தவர் கைது..!
Jun 18, 2025 02:07 PM
183
பிக்பாக்கெட் அடித்தவர் கைது
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக வீட்டை விற்று எடுத்துச் சென்ற 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை திருடிய 61 வயது பிக்பாக்கெட் திருடனை தாம்பரம் போலீஸார் கைது செய்து பணத்தை மீட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையைச் சேர்ந்த சூர்யகலா மகனின் மருத்துவ சிகிச்சைக்கு மதுரை செல்வதற்கு ரயில் ஏறுவதற்காக ஷேர் ஆட்டோவில் தாம்பரம் சென்றார்.
அப்போது, அவரது கைப்பையில் வைத்திருந்த பணம் திருடு போனதால் கண்ணீர் மல்க போலீஸில் புகாரளித்தார். சி.சி.டிவி பதிவுகளை ஆய்வு செய்து அனகாபுத்தூரைச் சேர்ந்த ஜான் என்ற பாஸ்கரை போலீசார் கைது செய்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu