முகப்பு
சென்னை 'ரூட் தல' மோதலை தடுக்க 257 இடங்களில் கண்காணிப்பு
Jun 18, 2025 02:18 PM
63
'ரூட் தல' மோதலை தடுக்க நடவடிக்கை
சென்னையில் மாணவர்களுக்கு இடையிலான ரூட் தல மோதலை தடுப்பதற்காக மாநகர் முழுவதும் 257 இடங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
அண்ணா நகர் பகுதியில் மாணவர்கள் ஒன்று திரண்டு ரகளையில் ஈடுபடுவதாக கூறப்படும் நிலையில், அப்பகுதி முழுவதும் அதிக அளவில் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
அதேபோல், கீழ்ப்பாக்கம், மெரினா, நந்தனம், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் காவலர்கள் கையில் லத்தியுடன் கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் திருவள்ளூர், ஆவடி உள்ளிட்ட புறநகர் ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் மாணவர்கள் ரகளையில் ஈடுபடுவதை தடுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu