கார் பார்க்கிங்கிற்காக அமைச்சரிடம் புகார்... பருத்திவீரன் சித்தப்பா பராக்..!

0 1992

சென்னை போரூரில் தான் வாங்கிய வீட்டில் கார்பார்க்கிங் இடத்தை புரோக்கர் ஒருவர் அபகரித்து கடை கட்டி ஆக்கிரமித்துக் கொண்டு மிரட்டுவதாக கூறி அமைச்சர் தாமோ அன்பரசனிடம் நடிகர் சரவணன் புகார் அளித்துள்ளார்.

பருத்திவீரன் படத்தில் நாயகனுக்கு சித்தப்பா செவ்வாழையாக நடித்து புகழ்பெற்றவர் நடிகர் சரவணன். இவர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறை தீர் கூட்டத்தில் அமைச்சர் தாமோ அன்பரசனை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார்.

உள்ளாட்சி பிரதிநிதிகளும், பொதுமக்களும் அமைச்சரிடம் புகார் அளித்த நிலையில் நடிகர் சரவணனும் புகார் அளிக்க வந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சரவணன், போரூர் மவுலிவாக்கத்தில், லேக்வியூ குடியிருப்பில், கடந்த 2014 ஆம் ஆண்டு செண்பகராமன் என்பவரிடம் இருந்து இரண்டு வீடுகள் வாங்கியதாகவும், அந்த வீடுகளுக்கு உரிய பார்க்கிங், யூடி.எஸ் இடங்கள் 800 சதுரடி வரை தனக்கு வர வேண்டிய நிலையில் அதனை தனக்கு வீடு வாங்கிக் கொடுத்த புரோக்கர் ராமமூர்த்தி அபகரித்துக் கொண்டதாக கூறினார்.

அந்த இடத்தில் கடை கட்டி ஆக்கிரமித்துள்ள ராமமூர்த்தி மீது புகார் அளித்து 6 மாதமாக நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்பதால் அமைச்சரை சந்தித்து புகார் அளித்திருப்பதாக தெரிவித்தார்.

தான் முதல் மனைவியிடம் பேசாமல் பிரிந்து இருந்ததை பயன்படுத்தி இடத்தை ஆக்கிரமித்துக் கொண்ட ராமமூர்த்தி, அவரது மனைவி ஜெயமணி, பத்திர பதிவு செய்து கொடுத்த இளவரசன் ஆகியோர் தன்னை ஏமாற்றுவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார் நடிகர் சரவணன்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments