என் வீட்டில் வித்தியாசமான செடி உள்ளது.. மகன் அனுப்பிய புகைப்படத்தால் தகப்பனை தட்டி தூக்கிய போலீசார்..

காஞ்சிபுரத்தில் வீட்டுத் தொட்டியில் கஞ்சா செடி வளர்த்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில் வீட்டுத் தொட்டியில் கஞ்சா செடி வளர்த்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்த தொழிலாளியான கண்ணுசாமி தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்த நிலையில், அவரது மகன் அதனை செல்போனில் படம் எடுத்து தங்கள் வீட்டில் வித்தியாசமான செடி வளர்த்து வருவதாக மற்ற நண்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்த படம் பல குழுக்களுக்கு பகிரப்பட்ட நிலையில், சிவகாஞ்சி போலீசாரின் பார்வைக்கும் சென்றது. அது கஞ்சா செடி என்பதை தெரிந்துக் கொண்ட போலீசார், செடியை பறிமுதல் செய்ததோடு, கண்ணுசாமியையும் கைது செய்தனர்.
Comments