அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு.. மூவரையும் 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

0 1087

உத்தரபிரதேசத்தில் மாபியா சகோதரர்களை சுட்டுகொலை செய்த மூவரையும் 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பிரக்யாராஜ் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 15 ஆம் தேதி அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோரை 3 பேர் சுட்டுக் கொன்றனர்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட மூவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பிரக்யாராஜ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் தரப்பில் அனுமதி கோரப்பட்ட நிலையில், 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments