குஜராத்தில் மின்சார ரயிலில் திடீரென பற்றிய தீ மளமளவென பரவியதால் ரயில் பெட்டிகள் பெரும் சேதம்..!

குஜராத்தில் மின்சார ரயிலில் திடீரென பற்றிய தீ மளமளவென பரவியதால் ரயில் பெட்டிகள் பெரும் சேதமடைந்தன.
குஜராத் போதாத் ரயில் நிலையத்தில் இருந்து அகமதாபாத் செல்ல இருந்த பயணிகள் ரயிலில் திடீரென தீப்பற்றி கொண்டது.
கொழுந்துவிட்டு எரிந்த தீயால் ரயில் பெட்டிகள் கடும் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவித்த ரயில்வே நிர்வாகம், இது தொடர்பாக விசாரித்து வருகிறது.
Comments