பேட்டி கொடுத்தே பெரிய ஆளாக வேண்டும் என அண்ணாமலை நினைக்கிறார் - இ.பி.எஸ்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்து தன்னிடம் கேள்விகள் ஏதும் கேட்க வேண்டாம் என்றும் அவர் தன்னை முன்னிலைப்படுத்தவே தொடர்ந்து பேசி வருவதாகவும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சேலம் ஓமலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேட்டிகள் கொடுத்தே அண்ணாமலை பெரிய ஆளாக வேண்டும் என முயற்சிப்பதாகவும், முதிர்ந்த அரசியல்வாதிகளை பற்றி மட்டும் தன்னிடம் கேள்விகளை கேட்கலாம் என்றும் கூறினார்.
மேலும், எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டங்களுக்கு போலீசார் உரிய பாதுகாப்பு வழங்குவதில்லை என்றும் சட்டப்பேரவையில் கூட எதிர்க்கட்சித் தலைவரான தாம் பேசுவதை நேரலை செய்வதில்லை என்றும் இ.பி.எஸ். குற்றஞ்சாட்டியுள்ளார்.
Comments