எல்.முருகன் இல்லத்தில் தமிழ் புத்தாண்டு விழா - பட்டு வேஷ்டி, பட்டுச்சட்டை அணிந்து பங்கேற்றார் பிரதமர் மோடி...!

உலகின் பழமையான மொழியாக தமிழ் இருப்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையானது என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு டெல்லியில் உள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் இல்லத்தில் நடைபெற்ற விழாவில் பட்டு வேஷ்டி, பட்டுச்சட்டை மற்றும் துண்டு அணிந்து பிரதமர் மோடி பங்கேற்றார்...
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், தமிழ் கலாச்சாரம் இந்தியாவை ஒரு தேசமாக வடிவமைத்தது என்று கூறினார்.
உலகின் எந்த நாட்டிற்குச் சென்றாலும் அங்கு தமிழர்களை காணலாம் என்றும், அவர்கள் அந்த நாடுகளுக்கு தங்களது கலாச்சாரத்தையும் எடுத்துச் செல்கிறார்கள் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
Comments