BIG STORIES
கார் வாங்க ரூ.20 லட்சம்.. காதலியிடம் ஆட்டைய போட்ட இன்ஸ்டா காதலன் ஓட்டம்..! திகைத்து நிற்கும் குடும்பம்
Jun 17, 2025 01:24 AM
274
கார் வாங்க ரூ.20 லட்சம்.. காதலியிடம் ஆட்டைய போட்ட இன்ஸ்டா காதலன் ஓட்டம்..!
சென்னை அடுத்த குமணன்சாவடியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், வியாபாரியான தனது தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்து 20 லட்சம் ரூபாயை திருடி, உடன் படிக்கும் காதலனுக்கு கார் வாங்க அள்ளிக் கொடுத்த தகவல் பெற்றோரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது
சென்னை குமணன்சாவடியை சேர்ந்த வியாபாரி ஒருவரது மகள் மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரியில், பி சி ஏ முதலாம் ஆண்டு படித்து வருகின்றார். தன் வகுப்பில் படித்து வந்த புருஷோத்தமன் என்ற மாணவனுடன் நட்பாக பழகியுள்ளார். நீண்ட நாட்களாக நட்பாக பழகிய நிலையில் மாணவியை காதலிக்கக் கூறியதாகவும் படிப்பு முடிந்த பின் பார்க்கலாம் என மாணவி ஆரம்பத்தில் உஷாராக மறுத்துள்ளார். தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் புருசோத்தமன் தன்னை ஹீரோ போல கெத்து காண்பித்த பதிவுகளால் ஈர்க்கப்பட்டு மாணவியும் காதல் வயப்பட்டுள்ளார்.
அவ்வப்போது மாணவன் புருஷோத்தமன் செலவிற்காக கல்லூரி மாணவியிடம் பணம் கேட்டு பெற்று வந்துள்ளார். இன்ஸ்டாகிராம் மூலமாக ஆபாசமாக குறுந்தகவல்களையும் பகிர்ந்து மாணவியை தனது இச்சைக்கும் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகின்றது. இதனிடையே புருஷோத்தமன் தான் சொகுசு கார் ஒன்று வாங்க உள்ளதாகவும் அதற்கு பணம் குறைவாக இருப்பதாகவும் மாணவியிடம் பணம் கேட்டுள்ளார். இனி நாம் காரில் ஊர் சுற்றி இன்ஸ்டா ஸ்டோரிஸ் போடலாம் என ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்துள்ளார்.
இதனை நம்பி மளிகைக் கடை நடத்திவரும் தனது தந்தையின் சேமிப்பு பணம் 20 லட்ச ரூபாய் பணத்தை புருஷோத்தமனிடம் கொடுத்துள்ளார். கார் வாங்கிய பிறகு தன்னோடு நன்றாக பழகுவார் என நினைத்த நிலையில், அதன் பிறகு புருஷோத்தமன் சரியாக பேசவில்லை என மாணவி போலீசாரிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து தன்னைத் தவிர்த்து வந்த நேரத்தில் தன் வீட்டில் பணம் காணாமல் போனது குறித்து தந்தை கேட்டதாகவும், அப்போது உண்மையை மாணவி கூறியதாக தெரிவித்துள்ளார். தன்னை ஆசை வார்த்தை காட்டி காதலித்து ஏமாற்றி பணத்தை மோசடி செய்த கல்லூரி மாணவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவியும் அவரது தந்தையும் போலீசில் புகார் அளித்தனர்.
இதற்கு ஆதாரமாக கல்லூரி மாணவி தன்னோடு மாணவன் எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் whatsapp சாட்டுகள் உள்ளிட்டவற்றை ஆதாரமாக கொடுத்துள்ளார். மேலும் கார் வாங்கியதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார். இதுகுறித்து சென்னை கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெற்றோருக்கு மகள் மீது சந்தேகம் வந்ததும். மகளின் செல்போனை சோதனை செய்தபோது , காணாமல் போன 20 லட்சம் ரூபாய் பணத்தை காதலனுக்காக கார் வாங்க கொடுத்தது தெரிய வந்ததாக பெற்றோர் போலீசில் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் மாணவியின் செல்போனை ஆய்வு செய்ததில், காதலன் இன்ஸ்டாகிராமில் காதலிக்கு ஆபாச ஷாட்கள் அனுப்பி இருந்ததும் தெரிய வந்ததுள்ளது. இந்த விஷயத்தை அறிந்த பெற்றோர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உயிரை மாய்த்து கொள்ள முயன்றதாகவும் கூறப்படுகிறது. புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவனுக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
மாணவியை காதலிப்பதாக கூறி இளைஞன் ஏமாற்றினாரா? பணத்தை வாங்கிக் கொண்டு மிரட்டினாரா? காதல் விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சனையா ? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பெற்று வருவதாகவும், கல்லூரி மாணவன் வேறு மாணவிகளோடு இருப்பது போன்ற புகைப்படங்களை கைப்பற்றி இருப்பதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu