RECENT NEWS

பெண் வழக்கறிஞருக்கு பாலியல் தொல்லை, மிரட்டல்

BIG STORIES

தேனி பெண் பெயரில் ரூ.500 கோடி சொத்தாம்பா... ஏ.டி.ஜி.பி கைது பின்னணி..!

Jun 17, 2025 01:13 AM

443

தேனி பெண் பெயரில் ரூ.500 கோடி சொத்தாம்பா... ஏ.டி.ஜி.பி கைது பின்னணி..!

தேனி பெண் பெயரில் ரூ.500 கோடி சொத்தாம்பா... ஏ.டி.ஜி.பி கைது பின்னணி..!

500 கோடி ரூபாய் சொத்துள்ள தேனி பெண்ணை காதல் திருமணம் செய்த திருவள்ளூர் இளைஞரின் 17 வயது சகோதரன், சைரன் வைத்த காரில் கடத்தப்பட்ட சம்பவத்தில், நீதிமன்ற உத்தரவின் பேரில் ஏ.டி.ஜி.பி ஜெயராம் கைது செய்யப்பட்டுள்ளார்..


தேனியை சேர்ந்த செல்வந்தர் வனராஜா என்பவரின் மகள் விஜஸ்ரீயும், திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த தனுஷ் என்ற இளைஞரும் இன்ஸ்டாகிராமில் காதலித்து வீட்டை விட்டு வெளியேறி கடந்த ஏப்ரல் மாதம் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டார்.

500 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதியான தனது மகள் விஜயஸ்ரீ சாதாரண குடும்பத்தில் வாழ்வது பெண்ணின் அப்பா வனராஜாவுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் வெள்ளவேடு காவல் நிலையத்தில் ஆஜரான விஜயஸ்ரீ தனக்கு சொத்து ஏதும் வேண்டாம், எக்காலத்திலும் உங்கள் வீட்டிற்கு வரமாட்டேன் என்று 3 முறை எழுதி கொடுத்து சென்றதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் தான் சம்பவத்தன்று களாம்பாக்கம் கிராமத்திற்கு சைரன் வைத்த காரில் சென்ற மர்ம கும்பல் தனுஷின் வீடு புகுந்து விஜயஸ்ரீயை தேடியுள்ளனர். அங்கு அவர்கள் இருவரும் இல்லை என்பதால் தனுஷின் தம்பியான 17 வயது சிறுவனை காரில் கடத்திச்சென்றதாக கூறப்படுகின்றது. போலீசில் அளித்துள்ள புகாரில் சைரன் வைத்த காரில் சிறுவன் கடத்தப்பட்டது தெரியவந்ததால் இந்த வழக்கு விசாரணையை வடக்கு மண்டல ஐஜி அஸ்ராகார்க் நேரடியாக கண்காணித்தார்.

இந்த வழக்கில் விசாரணையை முன்னெடுத்த திருவாலங்காடு போலீசார் , பெண்ணின் தந்தை வனராஜா, முன்னாள் எஸ்.ஐ. மகேஸ்வரி, வழக்கறிஞர் சரத்குமார், பிரபாகரன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து அவர்களது காரில் இருந்து 6 லட்சம் ரூபாய் கைப்பற்றினர். விசாரணையில் மகேஸ்வரி மற்றும் சரத்குமார் கொடுத்த தகவலின் பேரில் ஏ.டி.ஜி.பி ஜெயராம் மற்றும் பூவை ஜெகன்மூர்த்தியின் தொடர்பு தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தன்னுடைய மகளை தனுஷிடமிருந்து பிரித்து வீட்டுக்கு அழைத்துச் செல்ல வனராஜா முடிவு செய்திருக்கிறார். இதனால் அவர், காவல்துறையில் போலியான சாதிச் சான்று கொடுத்து பணியில் சேர்ந்த புகாரில் பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் காவல் உதவி ஆய்வாளரான மகேஸ்வரி என்பவரை அணுகியதாக கூறப்படுகின்றது.

மகேஸ்வரிக்கு பணி காலத்தில் ஏ.டி.ஜி.பி ஜெயராம் முன்னரே தெரியும் என்பதால், பெண்ணின் தந்தையுடன் சென்று ஜெயராமை சந்தித்து உதவி கேட்டுள்ளார். அவரது சிபாரிசின் பெயரில் அவரது சைரன் வைத்த காரிலேயே சென்று பெண்ணின் தந்தை உள்ளிட்டோர், திருவள்ளூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் வைத்து புரட்சிபாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தியை சந்தித்ததாகவும், அவரது ஆதரவாளர்கள் சிலருடன் சென்று களாம்பாக்கத்தில் உள்ள தனுஷ் வீட்டுக்கு சென்று சிறுவனை கடத்தியதாக போலீசார் தெரிவித்தனர். சைரன் வைத்த கார் ஓட்டலில் சென்று நின்ற காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தன. இது இந்த வழக்கின் முக்கிய தடயமானது

இதன் அடிப்படையிலேயே முன் ஜாமீன் மனு விசாரணையின் போது ஜெகன் மூர்த்தியை கட்டபஞ்சாயத்து செய்வதா எம்.எல்.ஏவின் வேலை ? என்று கடுமையாக எச்சரித்த நீதிபதி வேல்முருகன், தவறான நபருடன் 1 லட்சம் பேர் வந்தாலும் தூக்குவேன் என்றார். மேலும் போலீஸ் விசாரணைக்கு தனியாகத்தான் செல்ல வேண்டும் என்று ஜெகன் மூர்த்தியை ஒரு பிடி பிடித்த நீதிபதி, சைரன் வண்டியை கொடுத்தனுப்பி கடத்தலுக்கு உடந்தையாக இருந்த ஏ.டி.ஜி,பி ஜெயராமை கைது செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து போலீஸ் சீருடையில் இருந்த ஏ.டி.ஜி.பி ஜெயராமை கைது செய்து திருவாலங்காடு காவல் நிலையம் அழைத்துச்சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடந்து வருகின்றது.

கர்நாடக மாநிலம் ராம நகரம் பகுதியைச் சேர்ந்தவரான ஜெயராம் IPS. கன்னட மொழியில் முதுகலை பட்டம் பெற்றவர், 34 வயதில், 1996 ஆம் ஆண்டு UPSC தேர்வில் வெற்றி பெற்று தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரி ஆனார்.

தற்போது ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி.யாக பணி புரிந்து வந்தார். அடுத்த ஆண்டு மே (2026 - May) மாதத்துடன் இவர் ஓய்வு பெறக்கூடிய சூழ்நிலையில், தற்போது இவர் சிறுவன் கடத்தல் வழக்கில் சிக்கி உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

மீண்டும் "மேடே" "மேடே" நடுவானில் பதறிய பயணிகள்!திணறிய சென்னை விமானம் திக் திக் நொடிகள்!!!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies