கந்துவட்டி கேட்டு மிரட்டப்படுவதாக கூறி தீக்குளித்து தற்கொலை முயற்சி-ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு

0 1099

கந்துவட்டி கேட்டு மிரட்டப்படுவதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டு தற்கொலை செய்ய முயற்சி செய்த நபர் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், வட்டிக்கு பணம் கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவலாக்குடி கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன் என்பவர் கொரடாச்சேரியைச் சேர்ந்த துரை என்பவரிடம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வட்டிக்கு வாங்கிய நிலையில், ஒரு லட்சம் ரூபாயை திருப்பி கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், துரை மேலும் இரண்டு லட்சம் ரூபாய் தரவேண்டும் என்று மிரட்டியதால் குடும்பத்தினருடன் ஆட்சியர் அலுவலகம் வந்த சிலம்பரசன், மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments