அமெரிக்கா - பிலிப்பைன்ஸ் ராணுவங்கள் இடையே கூட்டுப்பயிற்சி தொடக்கம்..!

அமெரிக்க மற்றும் பிலிப்பைன்ஸ் ராணுவங்கள் இணைந்து வருடாந்திர கூட்டுப் பயிற்சியை தொடங்கின.
பாலிகதான் எனப்படும் இப்பயிற்சியில் இருநாடுகளில் இருந்தும் 17 ஆயிரம் வீரர்கள், கடல் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்த பயிற்சியில் ஈடுபட உள்ளதாகவும், இது மிகப்பெரிய ஒத்திகையாக இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் ராணுவ தலைமையகத்தில் இதன் தொடக்க விழா நடைபெற்ற நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டுப்பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது அமெரிக்காவின் சக்தியை வெளிப்படுத்தும் விதமாக நடத்தப்படுவதாகவும் பிலிப்பைன்ஸை பாதுகாக்கும் நோக்கில் நடத்தப்படவில்லை எனவும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
Comments