தோல்வியால் தள்ளிப் போன கனவு.. நோவாக் ஜோகோவிக்கின் தோல்வியால் 100வது பட்டத்திற்கான கனவு தள்ளிப் போனது
திருப்பத்தூர் அருகே எருது விடும் திருவிழாவில் மாடு முட்டியதில் 17 வயது சிறுவன் உயிரிழப்பு..!
திருப்பத்தூர் மாவட்டம் சாமுடி வட்டத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவில் மாடு முட்டியதில் 17 வயது சிறுவன் உயிரிழந்தார்.
எருதுவிடும் விழாவில் சுமார் 250 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்ட நிலையில், காளைகள் ஓடும் தடுப்புக்கட்டைகளுக்குள் பழனிவட்டம் கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம் மகன் விக்ரமும் நின்றுக் கொண்டு ஓடும் மாடுகளின் வேகத்தை தடுக்க முயன்றுள்ளார்.
இதில், ஒரு மாடு முட்டி தூக்கி வீசியதில், அதே இடத்தில் விக்ரம் உயிரிழந்த நிலையில், உடல் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் விக்ரமின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
Comments