வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2.5 கோடி மோசடி..!

வெளிநாட்டில் உள்ள எண்ணெய் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் சுமார் இரண்டரை கோடி ரூபாய் மோசடி செய்ததாக தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை தியாகராய நகரில் இயங்கி வந்த நாப்ரோஸ் என்ற தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம், 3 மாதங்களுக்கு முன்பு மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பணிபுரிய ஆட்கள் தேவை என சமூக வலைதளங்களில் விளம்பரம் கொடுத்துள்ளனர்.
இதனை நம்பி தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஏராளமான பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பித்த நிலையில், ஆவணம் சரிபார்ப்பு, இரண்டாம் தவணை, மூன்றாம் தவணை என ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை கட்டணமாக பெற்றதாக கூறப்படுகிறது.
Comments