மாமனாரை நாட்டு துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடிய மருமகன்..!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மைத்துனியை வீட்டில் அடைத்து வைத்து மாமனாரை நாட்டு துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடிய மருமகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கோவிலூரைச் சேர்ந்த ராக்கம்மாள் என்பவர் கணவர் ராமச்சந்திரனுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார்.
ராமச்சந்திரன் தினமும் குடித்துவிட்டு ராக்கம்மாளை அடித்து துன்புறுத்துவது வழக்கமாக நடைபெறும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இதனை மாமனார் நாகப்பன் தட்டி கேட்ட போது ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன் அங்கிருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து சுட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்.
Comments