கைக்குழந்தையை காணவில்லையென கண்ணீருடன் தேடிய தாய்.. தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை..!

0 3209
கைக்குழந்தையை காணவில்லையென கண்ணீருடன் தேடிய தாய்.. தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை..!

மதுரையில் பச்சிளம் குழந்தையொன்று தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம், மேட்டுப்பகுதியை சேர்ந்த சித்ரா என்பவருக்கு சில நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் கைக்குழந்தையை வீட்டில் தூங்கவைத்து விட்டு, பள்ளியிலிருக்கும் தனது மூத்த மகனை அழைத்து வரச்சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது குழந்தை இல்லாததையறிந்து தேடியுள்ளார்.

இதில் வீட்டின் மேல்தளத்திலுள்ள தண்ணீர் தொட்டியில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் குழந்தை சடலமாக கிடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments