தமிழக மீனவர் சிக்கலைத் தீர்ப்பது குறித்து இந்திய - இலங்கை வெளியுறவு அமைச்சர்கள் பேச்சு

0 1561
தமிழக மீனவர் சிக்கல் தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும், இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிசும் பேச்சு நடத்தியுள்ளனர்.

தமிழக மீனவர் சிக்கல் தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும், இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிசும் பேச்சு நடத்தியுள்ளனர்.

டெல்லியில் நடைபெற்ற பேச்சில், மீனவர் சிக்கலைத் தீர்க்க இரு நாட்டுக்குழுக்களும் விரைந்து பேச்சு நடத்த ஒப்புக்கொண்டதாக அமைச்சர் ஜெய்சங்கர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார மீட்சிக்குச் சுற்றுலாத்துறையின் முக்கியத்துவத்தை இரு நாடுகளும் அங்கீகரித்ததாகவும், இலங்கையின் எரியாற்றல் பாதுகாப்பை மேம்படுத்த கூடுதல் நடவடிக்கைகள் குறித்து விவாதித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளிடையான பிணைப்பை வலுப்படுத்த மக்களிடையான தொடர்பின் முக்கியத்துவம் குறித்தும் பேசப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments