சீனாவில் இருந்து இலங்கை வருவோருக்கான வருகை விசா ரத்து

0 368

இலங்கையில் கொரோனோ வைரசால் ஒருவர் பாதிக்கப்பட்டதை அடுத்து, சீனப் பயணிகளுக்கு வருகை தந்தவுடன் விசா வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது.

‘கடந்த19 ஆம் தேதி சீனாவில் இருந்து இலங்கை வந்த 40 வயது சீனப் பெண் கடந்த 25 ஆம் தேதி இலங்கை விமான நிலையத்திலிருந்து அப்பெண் வெளியேறும் போது மருத்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுகாதாரத் துறை அமைச்சகத்தின் தொற்றுநோயியல் நிபுணர் சுடாத் சுரவீரா தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, சீனப்பயணிகளுக்கு வருகை தந்தவுடன் விசா வழங்குவதை ரத்து செய்ய இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments