RECENT NEWS

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - அ.தி.மு.க. எம்.பி.இன்பதுரை

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - அ.தி.மு.க. எம்.பி.இன்பதுரை

Mar 13, 2026

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - அ.தி.மு.க. எம்.பி.இன்பதுரை

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - அ.தி.மு.க. எம்.பி.இன்பதுரை

Mar 13, 2026

BIG STORIES

என் உயிரை காப்பாத்துண்ணே.. திமுக காரங்க வெட்டிட்டாங்கண்ணே... பா.ஜ.க.பிரமுகர் ரீல்ஸ் விபரீதம்.. ரத்த வெள்ளத்தோடு கதற கதற வீடியோ!

Jul 13, 2025 04:27 PM

229

என் உயிரை காப்பாத்துண்ணே.. திமுக காரங்க வெட்டிட்டாங்கண்ணே... பா.ஜ.க.பிரமுகர் ரீல்ஸ் விபரீதம்.. ரத்த வெள்ளத்தோடு கதற கதற வீடியோ!

“என் உயிரை காப்பத்துண்ணே... திமுக காரங்க என்னை வெட்டிட்டாங்கண்ணே...எப்படியாவது காப்பாத்துண்ணே... காவல்துறை காப்பாற்றல” - என உயிருக்கு போராடியபடி பா.ஜ.கக்காரர் ஒருவர், ரத்தம் சொட்ட சொட்ட வெளியிட்ட பதைபதைக்கவைக்கும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, அதற்கு முன்பாக அவர் ‘சென்சார்’ போடும் அளவுக்கு பனியனை கழட்டிவிட்டு உள்ளாடையுடன் குத்தாட்டம் வீடியோவும் வைரல் ஆகிவருகிறது...

அவர் அந்த வீடியோ மேலும் கூறும்போது, நான் பாரதிய ஜனதா கட்சியில் ஐந்து வருடங்களாக இருக்கிறேன். என்னை ரவுடிகள் இப்படி தாக்கிவிட்டார்கள். காவல்துறைக்கு போனேன் என்னை காப்பாற்றவில்லை. நீங்களாவது என்னைக் காப்பாற்றுங்கள். பிரதமர்கிட்ட சொல்லி எப்படியாவது உயிரைக் காப்பாற்றுங்கள். அண்ணாமலையிடம் சொல்லுங்கள்” என கதறி துடிக்கிறார்.

இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலை படத்தில் வரும் ‘ஏலே ஏலே எங்கிருக்க...’ , பாயும்புலி பட ‘ சூடான மோகினி...’ மற்றும் ஹிந்தி பாடல்களுக்கு குளித்துவிட்டு ‘முக்கா’ நிர்வாணத்தில் குத்தாட்டம் போடும் காட்சிகளும், வீடு கட்டிக்கொண்டிருக்கும் இடத்தில், ‘அடி ராக்கு முத்து ராக்கு...’ பாடலுக்கும் ஆட்டம் போடும் வீடியோவும் வைரல் ஆகிவரும் நிலையில், பா.ஜ.க நிர்வாகிக்கு என்ன நடந்தது? எதனால் நடந்தது? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள நடுவக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சேகரின் மகன் ராஜதுரை. இவர், கூட்டாம்புளியில் இரு சக்கர வாகன பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். மேலும் பாரதிய ஜனதா கட்சியில் கலை மற்றும் கலாச்சார பிரிவில் நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். ராஜதுரை, தான் குடியிருந்த வீட்டை இடித்துவிட்டு புதிதாக வீடு கட்ட துவங்கி உள்ளார்.

அப்போது, ராஜதுரைக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் திமுக பிரமுகரான பாலமுருகனுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், பாலமுருகன் தரப்பை வெறுப்பேற்றும் விதமாக ராஜதுரை ஆட்டம் போடும் வீடியோக்களை வெளியிட்டுவந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், பாலமுருகன் தரப்பு டென்ஷனாஜ இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், பிற்பகல் கான்கிரீட் கலவை போட்டுக் கொண்டிருந்தபோது பாலமுருகன், அவரது தந்தை பால்ராஜ் மற்றும் 6 பேர், பா.ஜ.க நிர்வாகி ராஜதுரை அவரது மனைவி ஜெயந்தி, ஜெயந்தியின் தம்பிகளான கோகுல் ராஜா, ஜெயராஜா, நவீன் ஆகியோரை வாள் மற்றும் அரிவாள் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் காயம் அடைந்த பா.ஜ.க நிர்வாகி ராஜதுரை, கோகுல்ராஜ், ஜெயராஜ், நவீன் மற்றும் ஜெயந்தி ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சாயர்புரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி, பாலமுருகன் அவரது தந்தை பால்ராஜ், மற்றும் அரவிந்த் நாகராஜ் உள்ளிட்ட கும்பலை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில்தான், தான் தாக்கப்பட்டதாக பாஜக பிரமுகர் பேசும் வீடியோவும் அவரது நடன வீடியோக்களும் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

செல்போனை பரிசோதித்த  கணவர் உடலில் பெட்ரோல் 
ஊற்றி தீ வைத்த மனைவி..! வாட்ஸ் அப் சாட்டிங் ரகசியத்தால் ஆவேசம்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies