மூன்று நாளில்... மூன்று முடிச்சு...சிக்கிய பள்ளி சிறுமிகள்..!

0 902

சென்னையில் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு ஆட்டோ ஓட்டுநர்களுடன் மூன்று நாட்களாக சுற்றி திரிந்த 10-ம் வகுப்பு மாணவிகள் 2 பேரை கடத்தி சென்று திருமணம் செய்த ஆட்டோ ஓட்டுநர்களை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னை கண்ணகிநகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியொன்றில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் மூன்று பேர் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் ஆசிரியர்கள் கண்டித்துள்ளனர். பெற்றோரை அழைத்து வரச்சொன்னதால் மறுநாள் பள்ளிக்கு புறப்பட்ட மூன்று பேரும் பெற்றோர்களிடம் சொல்லமால், பள்ளிக்கும் செல்லாமல் சீருடையிலேயே அந்த பகுதியில் சுற்றித் திரிந்துள்ளனர்.

ஆட்டோ ஓட்டுநர்களான கனகராஜ் மற்றும் விஜயக்குமார் ஆகிய இருவரும் சீருடையில் சுற்றி திரிந்த மாணவிகளை கவனித்துள்ளனர். வாடகைக்கு ஆட்டோ எடுத்து ஓட்டிவரும் கனகராஜுடன் விஜயக்குமாரும் உடன் இருப்பார். சிறுமிகளை பின் தொடர்ந்து பேச்சு கொடுத்த இருவரிடமும் மாணவிகளும் சகஜமாக பேச அவர்களைஅக்கரை கடற்கரை பகுதிக்கு ஆட்டோவில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளனர்.

மறுநாளும் பள்ளிக்கு புறப்படுவதாக கூறிவிட்டு புறப்பட்ட மாணவிகள் மூவரும் ஆட்டோ ஓட்டுநர்கள் இருவருடன் தியேட்டருக்கு சென்றுவிட்டு பள்ளி விடும் நேரத்திற்கு வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

இரண்டு நாட்கள் பள்ளிக்கு செல்லவில்லை, அவற்றை வீட்டிலும் சொல்லவில்லை ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தெரிந்தால் என்னவாகும் என அச்சமடைந்த மாணவிகளிடம், எங்கேயாவது வெளியூர் சென்றுவிடலாம் என ஆட்டோ ஓட்டுநர்கள் கூறி ஆசை வார்த்தையை நம்பி, மறுநாள் 3 மாணவிகளில் 2 பேர் அவர்களுடன் சென்றுள்ளனர்.

இதையடுத்து மாணவிகளின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கண்ணகி நகர் காவல் ஆய்வாளர் வீரக்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து தேடினர். பள்ளிக்கு செல்லாமல் அவர்களுடன் சுற்றித் திரிந்த மற்றொரு மாணவியிடம் விசாரிக்க இந்த உண்மை தெரிந்துள்ளது.

இதனிடையே துரைப்பாக்கம் பகுதியில் மாணவிகள் இருவரும் ஆட்டோவில் ஏறிச் செல்லும் சிசிடிவி காட்சிகளை வைத்து உறுதிப்படுத்திய போலீசார் ஆட்டோ ஓட்டுநர்கள் கனகராஜ் மற்றும் விஜயக்குமார் ஆகிய இருவரது செல்போன் சிக்னலை வைத்து பின் தொடர்ந்தனர். சென்னையில் இருந்து மாணவிகளை கும்பகோணம் அழைத்துச் சென்ற இருவரும் கோயிலில் வைத்து தாலி கட்டி அங்கிருந்து திருப்பூர் அழைத்து சென்றுள்ளனர்.

திருப்பூர் விரைந்த தனிப்படை போலீசார் விடுதியொன்றில் தங்கியிருந்த சிறுமிகளை மீட்டு ஆட்டோ ஓட்டுநர்கள் இருவரையும் கைது செய்தனர். காரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 25 வயதான கனகராஜ் ஏற்கனவே திருமணமானவன், 19 வயதான விஜயக்குமார் பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவன். மாணவிகளை திருமண ஆசை காட்டி அழைத்து சென்று பாலியல் பலாத்காரமும் செய்ததால் இருவர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

14 வயதே ஆன சிறுமிகள் இருவருக்கும் எது சரி, எது தவறு என்பது தெரிந்து முடிவு எடுக்க தெரியாமல் இது போல் சிக்கிக் கொண்டுவிட்டனர் என கூறும் காவல் துறையினர்.

பள்ளிக்கு செல்லும் தம் பிள்ளைகள் வீட்டில் இருந்து புறப்பட்டு பள்ளிக்கு தான் செல்கிறார்களா என்பதை கூட கவனிக்காத பெற்றோரும், பள்ளிக்கு வரவில்லையென்றால் பெற்றோரிடம் விசாரிக்க வேண்டும் என்று அக்கறை கட்டாத பள்ளி நிர்வாகமும் இது போன்ற சம்பவங்களுக்கு காரணம் என்கின்றனர் காவல் துறையினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments