கண்களை கட்டிக்கொண்டு.. புத்தகம் வாசிக்கும் சிறுமி..!

0 460

திண்டுக்கல் மாவட்டத்தைச்சேர்ந்த 7 ம் வகுப்பு மாணவி ஒருவர், கண்களை கட்டிக் கொண்டு, எதிரே உள்ள பொருட்கள் மற்றும் அதன் வண்ணங்களை சொல்லியும், புத்தகங்களை வாசித்தும், எழுதியும் அசத்துகிறார் .

பழனி அருகே சின்னக் கலையம்புத்துரைச் சேர்ந்த லட்சுமணன் - ஜோதி தம்பதியின் 12 வயது மகள் ராகவி ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கண்களை கட்டிக் கொண்டு, எதிரில் உள்ள பொருட்களின் வண்ணங்களை கூறுவதோடு, அதில் உள்ள வார்த்தைகளையும் அடுத்த நொடியே கூறி விடுகிறார். மேலும் புத்தகங்களை வாசித்தும், அதனை எழுதியும் காண்பிக்கிறார்.

ஹைதராபாத்தில் கடந்த ஏழு மாதங்களுக்கு முன் ப்ரைட்னஸ் மைன்ட்(brightness mind) என்ற பயிற்சியை 10 நாட்கள் மட்டுமே கற்று பின்னர் வீட்டில் பயிற்சியில் ஈடுபட்டதாக ராகவி தெரிவித்தார்.

அடுத்து 20 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ளவர்களது ஆடைகளின் நிறம் மற்றும் செய்கைகள் பற்றிய பயிற்சியில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

ராகவியின் இந்த அசாத்திய திறமையானது அனைவரையும் வியக்கவைப்பதாக அமைந்துள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments