மாற்றத்தை நிகழ்த்த மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் : கமல்ஹாசன்

0 175

மாற்றத்தை நிகழ்த்த மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் 88 வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் அப்துல்கலாம் கனவுகளை நிறைவேற்றுவத்தில் மாணவர்களின் பங்கு என்ற தலைப்பில் கமல்ஹாசன், கல்லூரி மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், திறன்மேம்பாடு தான் இந்தியாவின் அடுத்த சத்தியாகிரக இயக்கமாக எடுத்துச் செல்லவேண்டிய ஒன்று என கூறினார். ஒற்றைக் கல்வி முறை, ஒற்றைக் கலாச்சாரமாக இல்லாமல், பன்முகத்தன்மையோடு புரிதலோடு கல்வி இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார். அரசியலுக்கு மாணவர்கள் வர வேண்டும் என்றும் கமல் அழைப்பு விடுத்தார்.இதன் பின்னர் மாணவ,மாணவியர் கேள்விக்கு கமல்ஹாசன் பதிலளித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய ஐசரி கணேஷ், கமல்ஹாசன் திரைத்துறைக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவு பெற உள்ளதை ஒரு விழாவாக வரும் நவம்பர் 7 ஆம் தேதி நடத்த இருப்பதாகவும், அதில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று கமல்ஹாசனை வாழ்த்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments