சாக்கடையில் வீசப்பட்ட குழந்தையை மீட்ட நாய்கள்

0 557

ஹரியானாவில் சாக்கடைக்குள் வீசப்பட்ட குழந்தையை இரு நாய்கள் காப்பாற்றும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

கைத்தல் என்ற இடத்தில் அதிகாலை 4 மணியளவில் பெண் ஒருத்தி பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்ட குழந்தையைத் தூக்கி வந்து சாக்கடையில் வீசிச் செல்கிறார்.

சற்று நேரத்தில் அவ்வழியே சென்ற இரு தெரு நாய்கள் குழந்தையை கவரோடு வெளியே இழுத்துக் காப்பாற்றின. அவை குரைத்து கவனத்தை ஈர்த்ததும், அக்கம்பக்கத்தினர் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

குழந்தை உயிரோடு இருப்பதாகத் தெரிவித்துள்ள மருத்துவர்கள், ஆனால் ஆபத்தான நிலையில் இருப்பதால் சிகிச்சை அளித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments