இந்தியாவிற்கு எந்த ஆபத்தும் இல்லை.. இண்டியா கூட்டணிக்குத்தான் தற்போது ஆபத்து : ஆர்.பி.உதயகுமார்

இன்றைய நிலையில் இண்டியா கூட்டணிக்கு வேண்டுமானால் ஆபத்து இருக்கலாமே தவிர இந்தியாவிற்கு எந்த ஆபத்தும் இல்லை என அ.தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் எந்த விழாவில் பேசினாலும் இந்தியாவுக்கு பேராபத்து என்று ஒரு பொய்யான செய்தியை தொடர்ந்து அவதூறாக பரப்பி மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக அவர் வெளியிட்டுள்ள காணொளியில் கூறியுள்ளார்.
Comments