முகப்பு
வருடத்திற்கு ரூ.3000 கட்டணத்தில் பாஸ்டேக் பாஸ்.. வந்தாச்சு சூப்பர் ஆஃபர்..!
Jun 18, 2025 10:03 AM
115
வந்தாச்சு சூப்பர் ஆஃபர்..!
வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் 3,000 ரூபாய் கட்டணத்தில் ஓராண்டு முழுவதும் பயன்படுத்தும் வகையில் பாஸ்டேக் பாஸ் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார்.
இது குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், அந்த பாஸ் மூலம் ஆண்டுக்கு அதிகபட்சம் 200 முறை தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடந்து செல்லலாம் என்றார்.
சரக்கு வாகனங்கள் அல்லாத தனியார் வாகனங்களான கார், ஜீப், வேன்கள் மட்டும் புதிய கட்டண பாசை எடுத்து பயன்படுத்தலாம் என்றும் கட்காரி விளக்கமளித்துள்ளார்.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் தடையற்ற மற்றும் செலவு குறைந்த பயணத்திற்கு வருடாந்திர பாஸ் வழிவகை செய்யும் என கட்காரி குறிப்பிட்டார்.
மேலும், புதிய சேவையை பயன்படுத்த பிரத்யேக இணையதள இணைப்பு விரைவில் Rajmarg Yatra செயலியிலும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் வலைதளங்களிலும் வெளியிடப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu