சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
தாராபுரத்தில் மாணவர்கள் விடுதியின் காப்பாளர் தூக்குப்போட்டுத் தற்கொலை

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மாணவர்கள் விடுதியில் விடுதிக் காப்பாளர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தாராபுரம் பொள்ளாச்சி சாலை சி.எஸ்.ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பிஷப் தார்ப் மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு காப்பாளராக கோவை மாவட்டம் வால்பாறை பாராளை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த வினித்குமார் என்பவர் வேலைபார்த்து வந்தார்.
நேற்று இரவு வினித்குமார் வழக்கமான ரோந்துப் பணிக்கு வராததால், மாணவர்கள் சென்று பார்த்தபோது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதுகுறித்து தாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments