சென்னையை பாதுகாக்க, சுத்தமாக பராமரிக்க பொதுமக்களின் பங்களிப்பு தேவை - மேயர் பிரியா

சென்னையை பாதுகாக்கவும், சுத்தமாக பராமரிக்கவும் பொதுமக்கள் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவுறுத்தினார்.
வருகிற ஆகஸ்ட் 22 ந்தேதி அன்று 384வது பிறந்த நாள் காணும் சென்னை தினத்தை கொண்டாடும் வகையில் பெசன்ட் நகர் கடற்கரையில் இசை நிகழ்ச்சியும், குப்பை இல்லா சென்னை என தலைப்பில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது.
இதில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
தூய்மையான சென்னையை உருவாக்க மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபாடு மட்டுமே போதாது என்றும் ஒவ்வொரு தனிநபரும் முயன்றால் மட்டுமே மாற்றத்தை உண்டாக்க முடியும் என்றும் கூறினார்.
Comments