ஆப்ரிக்காவின் பழமையான யூத வழிபாட்டு தளம் அருகே துப்பாக்கி சூடு - 4 பேர் உயிரிழப்பு

0 929

ஆப்ரிக்காவின் பழமையான யூத வழிபாட்டு தளம் அருகே பாதுகாப்பு படை வீரர் ஒருவர் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.

துனிசியாவின் ஜர்பா தீவில் அமைந்துள்ள அந்த வழிபாட்டு தளம் மீது பல முறை பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர். தற்போது யூதர்களின் புனித பயண காலம் என்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சக வீரர் ஒருவரை சுட்டுக்கொன்றுவிட்டு வழிபாட்டு தளத்திற்கு சென்ற பாதுகாப்பு படை வீரர், துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினார்.

இதில் மேலும் ஒரு பாதுகாப்பு படை வீரரும், சுற்றுலா பயணிகள் 2 பேரும் உயிரிழந்தனர். துப்பாக்கி சூடு நடத்திய நபர் சக பாதுகாப்பு படை வீரர்களால் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments