ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுவன் 15 கிலோ மீட்டர் தூரத்தை 3.18 மணி நேரத்தில் கடலில் நீந்தி ஆசியா புக் ஆப் ரெக்கார்டில் சாதனை..!

கடலில் 15 கிலோ மீட்டர் தூரத்தை 3 மணி நேரம்18 நிமிடங்களில் நீந்திக் கடந்து ஆசியா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்த ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுவனை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
லக்ஷய் குமார் என்ற அந்த சிறுவன், நீலாங்கரை கடற்பகுதியிலிருந்து சென்னை மெரினா கடற்கரை வரை நீந்தி சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.
மூன்று வயதில் இருந்து லக்க்ஷய் நீச்சல் பயிற்சி பெறுவதாகவும் எதேச்சயாக நீச்சல் குளத்திற்கு செல்லும் பொழுது அவருக்கு ஆர்வம் இருப்பதை அறிந்ததாகவும் அவரது தாய் தெரிவித்தார்.
விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற விழாவில் லக்ஷ்ய் கிருஷ்ணகுமாரை நேரில் சந்தித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Comments