காவல் நிலையம் எதிரே தீக்குளித்த சிறைக்காவலர் ராஜா சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.!

0 1287

திருச்சி மாவட்டம் லால்குடி காவல் நிலையம் எதிரே தீக்குளித்த பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சிறைக்காவலர் ராஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

லால்குடியை அடுத்த செம்பக்கரை கிராமத்தை சேர்ந்தவர்கள் நிர்மல் மற்றும் ராஜா. சகோதரர்களாக இவர்களில் நிர்மல் காவலராகவும், ராஜா லால்குடி கிளை சிறையில் சிறை காவலராகவும் பணியாற்றி வந்துள்ளனர்.

வீட்டை பாகம் பிரிக்கும்போது நிர்மலுக்கு சற்று கூடுதலாக அவர்களது தந்தை பிரித்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சகோதரர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் அடிதடி வழக்கு ஒன்றில் ராஜா குற்றவாளியாக சேர்க்கப்பட்டதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சொத்து பிரச்சனை தொடர்பாக ராஜா, நேற்று லால்குடி காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றபோது காவல் உதவி ஆய்வாளர் பொற்செழியன் சரிவர விசாரணை செய்யாததால் விரக்தியடைந்த ராஜா காவல் நிலையம் எதிரே பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார்.

பலத்த காயமடைந்த அவரை திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதனிடையே உரிய  விசாரணை மேற்கொள்ளாத காவல் உதவி ஆய்வாளர் பொற்செழியனை பணியிடை நீக்கம் செய்து டிஐஜி சரவண சுந்தர் உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments