பாகிஸ்தானில், இறை நிந்தனையில் ஈடுபட்டதாக சீன பொறியாளர் கைது..!

பாகிஸ்தானில், இறை நிந்தனையில் ஈடுபட்டதாக சீன பொறியாளர் கைது செய்யப்பட்டார். டாஸு அணையில் சீன நிதியுதவியுடன் நீர்மின் நிலையம் கட்டப்பட்டுவருகிறது.
ரமலான் நோன்பு வைத்திருந்ததால் மெதுவாக வேலை செய்த தொழிலாளர்களை சீன பொறியாளர் ஒருவர் கண்டித்துள்ளார். இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், அந்த சீன பொறியாளர் அல்லாவை அவமானப்படுத்தும் விதமாகப் பேசியதாக குற்றம்சாட்டி அங்கிருந்த தொழிலாளர்கள் அவரை தாக்க ஒன்று திரண்டனர்.
தகவலறிந்து விரைந்த போலீசார், ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்துவிடாமல் தடுக்க சீன பொறியாளரை உடனடியாக கைது செய்தனர். அதற்குள் சுற்றுவட்டாரங்களில் தகவல் பரவி, சீனாவை பாகிஸ்தானுடன் இணைக்கும் நெடுஞ்சாலையில் பலர் மறியலில் ஈடுபட்டனர்.
பாகிஸ்தானில் கடுமையாக அமல்படுத்தப்படும் இறை நிந்தனை சட்டங்களை ஐ.நா. மனித உரிமை ஆணையம் தொடர்ந்து கண்டித்துவருகிறது.
Comments