ஆற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்ற இரண்டு பள்ளி சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு...!

0 1148

திருப்பூர் நொய்யல் ஆற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்ற இரண்டு பள்ளி சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

முதலிபாளையம் பகுதயில் உள்ள நொய்யல் ஆற்றில் பள்ளி மாணவர்களான சந்துரு மற்றும் இனியன் ஆகிய இருவரும் குளிப்பதற்காக நண்பர்களுடன் ஆற்றில் இறங்கியுள்ளனர்.

ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்று, நீச்சல் தெரியாத காரணத்தால் இருவரும் புதை குழி பகுதியான சேற்றில் மூழ்கியுள்ளனர்.

இதைப் பார்த்த, உடன் வந்த மற்ற மாணவர்கள் சத்தம் எழுப்பவே பொதுமக்கள் மற்ற ஐந்து மாணவர்களை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். சேற்றில் சிக்கிய இரு மாணவர்களை மீட்க முடியாததால் ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களின் உதவியுடன் உயிரிழந்த இரண்டு மாணவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments