ஓங்கி மிதித்த கணவன்.. சிலமணி நேரத்தில் முத்தம் கொடுத்ததால் அந்தர் பல்டி..! கதறிய மனைவி சமாதானமான பின்னணி
மயிலாடுதுறையில், காதல் மனைவி கர்ப்பிணி என்றும் பாராமல் அரக்கத்தனமாக ஓங்கி மிதித்துவிட்டு கணவன் தப்பிச்சென்ற நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மனைவியை சமாதானம் செய்வதறக்காக முத்தமிட்ட போது செவிலியர்களிடம் கையும் களவுமாக சிக்கினான்.
மயிலாடுதுறை நகர விரிவாக்க பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றிற்கு மருத்துவ பரிசோதனைக்கு வந்த ஐந்து மாத கர்ப்பிணி பெண் ஒருவரின் தலைமுடியை பிடித்து தாக்கிய இளைஞரை பார்த்து பெண் ஒருவர் திட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது மாடிப்படியில் அமர்ந்திருந்த கர்ப்பிணி பெண்ணை, அந்த இளைஞர் திட்டியதோடு, வயிற்றில் ஓங்கி மிதித்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார்.
வலியால் அலறி துடித்த பெண்மணி கீழே விழுந்து கதறி அழுதார், எல்லோரும் அதிர்ச்சியில் அங்கு திரண்டனர்.
கண்ணீர் விட்டு கதறியதால், மயங்கிய நிலைக்குச் சென்ற அந்தப்பெண்ணை அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அந்தப்பெண்ணிடம் நடத்திய விசாரணையில் அந்தப்பெண் சீர்காழி தென்பதியை சேர்ந்த சுபா என்பதும், அவரை மிதித்துவிட்டு தப்பிச்சென்றவர் அவரது காதல் கணவர் விஜய் என்பதும் தெரியவந்தது. இதற்கிடையே சிகிச்சையில் இருந்த கர்ப்பிணி பெண் சுபாவை காணவில்லை. அவரை தேடிய போது அந்த மருத்துவமனையின் இருள் சூழ்ந்த பகுதியில் ஒரு இளைஞருடன் நெருக்கமாக அமர்ந்து இருந்தார்.
தாங்கள் இருப்பது மருத்துவமனை வளாகம் என்பதையும் மறந்து அந்த இளைஞர் சுபாவுக்கு முத்தமிட்டுக் கொண்டிருப்பதை கண்டு நோயாளிகளின் உறவினர்களும் , அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தனியார் பாதுகாப்பு பெண் ஊழியர்களும் தட்டி கேட்டனர்.
அவர்களிடம் தாங்கள் இருவரும் கணவன் மனைவி என்றும் பகலில் தன்னை மிதித்து விட்டுச்சென்ற கணவர் தான், தற்போது மனது மாறி, தன்னை சமாதானப்படுத்துவதற்காக வந்திருக்கிறார் என்று கூறி சமாளித்தார் சுபா.
சில மணி நேரங்களுக்கு முன்பு வரை வலியால் துடித்த கர்ப்பிணியான சுபா, தனது காதலன் கொடுத்த முத்தத்தால் கூலாகி, நீங்கள் உங்கள் வேலையை பார்த்துக் கொண்டு போங்கள் எங்களுக்கு தெரியும் என்று தன்னை உதைத்த உதவாக்கரை கணவருக்கு ஆதரவாக சண்டை செய்தார்.
இந்த பெண்ணுக்காகவா பரிதாபப்பட்டோம் என்று தலையில் அடித்தவாறே மற்றவர்கள் நகர்ந்து சென்றனர். பெண்ணை தாக்கியதாக போலீசிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் பெண் அடித்த அந்தர் பல்டியால் வழக்கு ஏதும் போலீசார் பதிவு செய்யவில்லை. அதே நேரத்தில் இரு இடங்களிலும் நடந்த சம்பவங்களின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
Comments