நண்பர் வீட்டில் நள்ளிரவு ஸ்டே.. அய்யோ போச்சே ஐ போன்..! பதற்றத்தில் நடிகை ஷாலு ஷம்மு..! போனை மீட்க போலீசார் தீவிரம்

0 4419

சென்னையில் நண்பர் வீட்டில் நள்ளிரவு தங்கிய நடிகை ஷாலு ஷம்முவின் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐ போன் மாயமானதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சூளைமேட்டில் காணாமல் போன போனை பட்டினப்பாக்கம் போலீசார் தேடும் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு.....

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரியுடன் ஆட்டம் போட்டு திரை ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஷாலு ஷம்மு என்கிற ஷாம்லி. இவர் நடித்த படங்களில் ஆடியதை விட இன்ஸ்டாகிராமில் போட்ட ஆட்டம் அவரை உலக அளவில் பிரபலமாக்கியது.

சென்னை புரசைவாக்கம் வைகோகாரன் தெருவில் வசித்து வந்த ஷாலு ஷம்மு சல்சா நடனக்கலைகளில் கைதேர்ந்தவர். பார்ட்டிகளில் பங்கேற்று நண்பர்களுடன் பொழுது போக்குவதையும் வாடிக்கையாக செய்து வந்தார்..

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி இரவு ஈஸ்டர் பண்டிகையன்று நண்பர்களோடு இணைந்து எம்.ஆர்.சி நகரில் உள்ள சேமர்செட் என்ற நட்சத்திர ஹோட்டலுக்கு பார்ட்டிக்கு சென்றுள்ளார். உற்சாக பானத்துடன் பார்ட்டியை முடித்துவிட்டு நள்ளிரவு 2 மணியளவில் நண்பர்களுடன் இணைந்து சூளைமேட்டில் உள்ள நண்பர் வீட்டில் ஷாலு ஷம்மு தங்கியதாக கூறப்படுகின்றது

ஏப்ரல் 10ஆம் தேதி காலை எழுந்து பார்த்த போது ஷாலு ஷம்முவின் விலையுயர்ந்த தனது ஐபோன் காணாமல் போயுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், நண்பர்களுடன் தங்கியிருந்த நட்சத்திர விடுதிக்கு சென்று அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். செல்போனை எங்கு வைத்தோம் என்பதை ஷாலுவால் கண்டுபிடிக்க இயலவில்லை என்று கூறப்படுகின்றது.

இதனையடுத்து ஜனவரி மாதம் 2 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கிய தனது செல்போன் மாயமானதாகவும் அதனை கண்டுபிடித்து தரக்கோரியும் பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் சூளைமேட்டில் நண்பர் வீட்டில் இரவு தங்கி இருந்தாலும், பார்ட்டிக்கு சென்ற ஓட்டல் பட்டினம்பாக்கம் காவல் எல்கைக்கு உட்பட்டது என்பதால் பட்டினம்பாக்கம் போலீசார் ஷாலுவின் செல்போனை திவிரமாக தேடி வருகின்றனர்.

போலீசார் செல்போனை மீட்கும் செயலியான ஐகிளவுடு மூலமாக தேடிய போது, சூளைமேட்டில் உள்ள நண்பர் வீட்டில் செல்போன் கடைசியாக இருந்ததை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விவரத்தை ஷாலுவிடம் தெரிவித்ததும், தனது நண்பர்கள் சிலரின் மீது சந்தேகம் இருப்பதாக கூறி நடிகை ஷாலு பட்டினம்பாக்கம் போலீசாரிடம் அவர்களது பெயர்களை கூறி உள்ளார். தகவலின் பேரில் பட்டினம்பாக்கம் போலீசார் சந்தேகத்துக்குரிய நபர்களை அழைத்து விசாரணை நடத்த உள்ளனர்.

அந்த ஐ-போனில் அவருடைய பல்வேறு வீடியோக்கள் இருப்பதாகவும், முக்கியமான புகைப்படங்கள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. எனவே அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களுக்காகவே செல்போனை மீட்க வேண்டும் என்ற பதற்றத்தில் நடிகை ஷாலு ஷம்மு உள்ளதாக கூறப்படுகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments