ராஜஸ்தான் மாநிலத்தின் முதலாவது '' வந்தே பாரத் ரயில் '' - இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

ராஜஸ்தான் மாநிலத்தின் முதலாவது '' வந்தே பாரத் ரயில் '' - இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
ராஜஸ்தான் மாநிலத்தின் முதலாவது வந்தே பாரத் ரயில் சேவையை, பிரதமர் மோடி இன்று காணொலிக் காட்சி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
ராஜஸ்தானின் அஜ்மீர் - டெல்லி கண்டோன்மென்ட் இடையேயான தொலைவினை இந்த ரயில் 5 மணி 15 நிமிடங்களில் கடக்கும். தற்போது இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை விட ஒரு மணிநேரம் முன்னதாகவே இந்த ரயில் பயணத்தை விரைவாக நிறைவு செய்வதுடன், புஷ்கர், அஜ்மீர் ஷரிஃப் தர்கா உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தலங்களையும் இந்த ரயில் இணைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இன்று ஜெய்பூர் - டெல்லி கண்ட்டோ ன்மெட் ரயில் நிலையங்கள் இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளது.
Comments