தடை செய்யப்பட வேண்டிய ஆன்லைன் கேம் பட்டியலை தயார் செய்யும் சைபர் கிரைம் காவல்துறை..!

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை சட்டத்தின்படி, தடை செய்ய வேண்டிய ஆன்லைன் கேம் பட்டியலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சைபர் கிரைம் போலீசார், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆளுநர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, ஆன்லைன் ரம்மி உள்பட இணையதள சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து, ஒழுங்குபடுத்தும் புதிய சட்டம் தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட செயலி மற்றும் இணையதளங்களை கணக்கெடுக்கும் பணியை தொடங்கியுள்ள சென்னை சைபர் கிரைம் போலீசார், ஆன்லைன் கேம் விளையாடுபவர்களை கண்டறிய திட்டம் வகுப்பதாகவும் கூறப்படுகிறது.
Comments