அமெரிக்காவின் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் காவல்துறை அதிகாரி உயிரிழப்பு..!

0 1250

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். அவசர சேவைகளை தொடர்புகொண்ட பெண், தன்னை ஒருவன் துப்பாக்கியால் சுட்டுவிட்டதாக கூறியுள்ளார்.

அவனை பிடிக்க வந்த 2 போலீசாரை நோக்கி அவன் கண்மூடித்தனமாக சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

துப்பாக்கி சூடு நடத்தியவனை போலீசார் பின்னர் கைது செய்தனர். அதே போல் ஓஹியோ மாநிலத்திலுள்ள ஒரு ஜிம்மில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். திங்கட்கிழமை டென்னிசி மாநிலத்திலுள்ள ஒரு பள்ளியில் திருநங்கை நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 மாணவர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்த நிலையில், அடுத்த நாளே மேலும் 2 துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments